என்னை அறிந்தால் - டீஸர் விமர்சனம்

என்னை அறிந்தால் - டீஸர் விமர்சனம்

செய்திகள் 4-Dec-2014 8:39 AM IST Chandru கருத்துக்கள்

35 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ட்வீட்’களை கொட்டிக் குவித்து ஒரு ‘மாஸ்’ ஹீரோவின் படத்திற்கு எதிர்பார்ப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ‘ட்விட்டரி’ல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். ஒரு வழியாக அவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. ‘தல’யை ஸ்கிரீனில் கௌதம் எப்படிக் காட்டுவார் என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்காகவே களமிறக்கப்பட்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ டீஸர்.

அஜித் பேசும் ஒரு பவுர்ஃபுல் டயலாக், ரொம்பவும் சிம்பிளான அதேநேரம் கேட்பதற்கு புதிதாக இருக்கும் ஹாரிஸின் டெக்னோ பீட் பிஜிஎம், டான் மெக்கார்தரின் ‘டாப் நோட்ச் ஷாட்ஸ்’, அஜித்தின் க்யூட் ஸ்மைல், ஒரு கன், ஒரு கத்தி.... இவ்வளவுதான் இந்த 59 வினாடிகள் ஓடும் ‘என்னை அறிந்தால்’ டீஸரில் கௌதம் மேனன் பயன்படுத்தியிருப்பது.

அஜித்திற்கு இருக்கும் ‘மாஸ்’ ஹீரோ இமேஜையும் விட்டுக் கொடுக்காமல், அதேநேரம் தன்னுடைய ‘கிளாஸ் மேக்கிங்’ ஸ்டைலும் கெட்டுவிடாமல் 59 வினாடிகளில் ஒரு குறும்படத்தையே கொடுத்திருக்கிறார் கௌதம்.

புளூ ஜீன்ஸ், ஒயிட் ஷர்ட், இடது கையில் வாட்ச், வலது கையில் காப்பு... அப்பப்பா... ‘தல டக்கருடோய்’ என சொல்ல வைத்திருக்கிறார் கௌதம். அஜித்தின் 4 விதமான கெட்அப்களையுமே இந்த டீசரில் காட்டியிருக்கிறார்கள். அதோடு த்ரிஷாவிற்கு ஒரு சீன், அனுஷ்காவிற்கு ஒரு சீன் என இரண்டு ஹீரோயின்களும் வந்து போகிறார்கள். விவேக், அருண் விஜய்யின் கேரக்டர்களில் சஸ்பென்ஸ் தொடர்ந்திருக்கிறது.

’’ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்தப் பக்கமா இல்ல அந்தப் பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கையில... ஒரு நாள், வாழ்க்கை என்னை ஒருத்தனா மாத்திச்சு... என்னை அறிந்தால்....’’ இந்த டயலாக்கை அஜித்தின் குரலில் கேட்கும்போது ஒவ்வொரு ‘தல’ ரசிகனுக்கும் கண்டிப்பாக புல்லரித்திருக்கும். அதுதான் அஜித்!

தலைப்பு எப்போது வரும் என காத்திருந்தார்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போதும் வரும் என காத்திருந்தார்கள், டீஸர் எப்போது வரும் என காத்திருந்தார்கள்... அடுத்ததாக பாடல்கள், டிரைலர், படம் எப்போது வரும் என்ற அஜித் ரசிகர்களின் காத்திருப்பை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கௌதம்.

மொத்தத்தில்... அஜித் படத்தின் டீஸர் எப்படி இருக்க வேண்டும் என இதற்கு முன்பு பல இயக்குனர்கள் ‘தல’ ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார்கள். ‘இப்படி பார்த்திருக்கீங்களா’ எனக் கேட்டு மிரட்டியிருக்கிறார் ‘என்னை அறிந்தால்’ டீஸர் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;