விஜய் - கே.வி.ஆனந்த் கூட்டணியா?

விஜய் - கே.வி.ஆனந்த் கூட்டணியா?

செய்திகள் 3-Dec-2014 12:25 PM IST VRC கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய்யின் 58-ஆவது படம். இந்தப் படத்தை தொடர்ந்து தனது 59-ஆவது படமாக ’ராஜா ராணி’ புகழ் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பே சமீபத்தில் தான் ஆரம்பமானது.

அதற்குள் விஜய்யின் 60-ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருக்கிறார் என்ற ஒரு தகவலை ட்விட்டரில் யாரோ ஒருவர் பதிவு செய்திருந்ததோடு, அது சம்பந்தமான ஒரு டிசைனையும் வெளியிட்டிருந்தார். இது உண்மை என்று நம்பி சில இணையதளங்களும் அந்த தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தது. அனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் யாரோ ஒருவர் செய்த வேலை அது என்றும் கே.வி.ஆனந்தே அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆர்வமிகுதியால் இதுபோன்ற வேலைகளில் சிலர் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;