‘மங்காத்தா’, ‘ஆரம்ப’த்தை தொடர்ந்து என்னை அறிந்தால்!

‘மங்காத்தா’, ‘ஆரம்ப’த்தை தொடர்ந்து என்னை அறிந்தால்!

செய்திகள் 3-Dec-2014 11:33 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, இன்று இரவு இப்படத்தின் டிஸ்ர் வெளியாகவிருக்கிறது. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ படங்களை தொடர்ந்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ ரைட்ஸையும் பிரபல சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது.

ஒரு புதிய யுக்தியாக இப்படத்தின் ஒவ்வொரு பாடலை வாரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் இனி வரும் வாரங்களில் வெளியிட இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, நாளுக்கு நாள் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;