‘ஐ’, ‘லிங்கா’வை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?

‘ஐ’, ‘லிங்கா’வை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?

செய்திகள் 3-Dec-2014 11:09 AM IST Chandru கருத்துக்கள்

இன்று (டிசம்பர் 3) இரவு 12 மணி வரை உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் யாரும் கண்டிப்பாக தூங்கப்போவதில்லை. சரியாக 12.01க்கு (டிசம்பர் 4, வியாழக்கிழமை) ‘என்னை அறிந்தால்...’ படத்தின் ஃபர்ஸ்ட் டீஸர் வெளிவரும் என்று எதிர்பார்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தின் ‘ஸ்கிரீன் பிரசென்ஸ்’ எப்படியிருக்கும் எனப் பார்ப்பதற்கு யாருக்குதான் ஆசை இருக்காது?

இப்படிப்பட்ட ஒரு தருணத்தை தாங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறோம் என்பதை ‘என்னை அறிந்தால்’ படக்குழுவினருக்கு உணர்த்தும் வகையில் நேற்றிலிருந்து #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் டிரென்ட் செய்து வருகிறார்கள். இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களை இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி செய்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அதோடு, இப்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலிருக்கிறது. இன்றும், நாளையும் அஜித் ரசிகர்கள் இந்த வேலையை கண்டிப்பாக நிறுத்தப் போவதில்லை. இதனால் உலகளவிலான டிரென்டில் இந்த ஹேஷ்டேக் இடம் பிடிக்கும் வாய்ப்பிருக்கிறது.

எதிர்பார்ப்பு இவ்வளவு பெரிதாக இருக்கும்பட்சத்தில் தங்கள் தலயின் ‘என்னை அறிந்தால்...’ ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ‘ஐ’ படத்தின் டீஸர் சாதனையை முறியடிக்க வேண்டும் என ஒவ்வொரு அஜித் ரசிகரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஐ’ படத்தின் டீஸர் தற்போதைய நிலவரப்படி 88 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. எந்த தென்னிந்திய சினிமாவும் நெருங்க முடியாத உயரத்தில் ‘ஐ’யின் சாதனை இருக்கிறது. அதேபோல், ‘கோச்சடையான்’ டீஸரை 48 லட்சத்திற்கு மேற்பட்டோரும், டிரைலரை 46 லட்சத்திற்கு மேற்பட்டோரும், ‘லிங்கா’ படத்தின் டீஸரை 40 லட்சத்திற்கு மேற்பட்டோரும், டிரைலரை 37 லட்சத்திற்கு மேற்பட்டோரும் கண்டுகளித்திருக்கிறார்கள்.

மேற்படி படங்களான ‘ஐ’, ‘லிங்கா’தான் தற்போதைய நிலவரப்படி தென்னிந்திய சினிமாவின் ‘யூ டியூப்’ சாதனையில் முன்னணியில் இருக்கிறது. இதனை அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் நெருங்குமா என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;