இந்த வாரம்... கோலிவுட்டில் ‘பேய் வாரம்’!

இந்த வாரம்... கோலிவுட்டில் ‘பேய் வாரம்’!

செய்திகள் 3-Dec-2014 10:13 AM IST Chandru கருத்துக்கள்

‘முனி’, ‘பீட்சா’, ‘காஞ்சனா’, ‘யாமிருக்க பயமேன்’ என சமீபகாலமாக சில பேய்ப் படங்கள் காட்டுத்தனமாக ‘கல்லா’ கட்ட, இப்போது கோடம்பாக்கமே சுடுகாட்டில்தான் குடியிருக்கிறது. ஒரு இருட்டறையும், நாலைந்து அறிமுக நடிகர்களும் இருந்தால் போதும் 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமெடுத்து 3 கோடி வரை சம்பாதிக்கலாம் என்ற மனக்கணக்கில் 50க்கும் மேற்பட்ட பேய்ப்படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) மட்டும் 4 பேய்ப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கின்றன.

ஆர்.வி.கே. ஃபிலிம் மீடியா தயாரிப்பில் புகழ்மணி எழுதி இயக்கியிருக்கும் ‘13ம் பக்கம் பார்க்க’, பைலட் நண்பர்கள் சிலர் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘ர’, ரைசிங் சன் ஃபிலிம் தயாரிப்பில் வீரா எழுதி இயக்கியிருக்கும் ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ என மூன்று நேரடித் தமிழ்ப்படங்கள் இந்த வெள்ளியில், ‘கொள்ளி வாய்’ பிசாசுகளோடு களமிறங்கவிருக்கின்றன. இருக்கிற கோலிவுட் பேய்கள் பத்தாதென்று, ஹாலிவுட்டிலிருந்தும் ஒரு பேயை இறக்குமதி செய்திருக்கிறார்கள். ‘ஜோம்பி நைட்’ என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் படமான ‘ஜோம்பி பெல்லி’ என்ற படமும் வரும் 5ஆம் தேதி வருகிறது.

மொத்தத்தில்... இந்த வாரம்... உங்கள் திரையரங்குகளில் ‘பேய் வாரம்’... காணத்தவறாதீர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;