இன்று முதல் ரௌடியாகும் விஜய்சேதுபதி!

இன்று முதல் ரௌடியாகும் விஜய்சேதுபதி!

செய்திகள் 3-Dec-2014 9:58 AM IST Chandru கருத்துக்கள்

தான் தயாரித்து நடித்திருக்கும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ திரைப்படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த சந்தோஷத்திலிருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு மிகவும் பிடித்த நடிகையான நயன்தாராவுடன் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில், தனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாராதான் எனவும், ‘சூது கவ்வும்’ படத்தில் வருவதுபோல் எந்த நடிகையாவது கடத்த வேண்டுமென்றால், தான் நயன்தாராவைத்தான் கடத்துவேன் என்றும் வேடிக்கையாகக் கூறினார் விஜய்சேதுபதி.

அவரின் ஆசையை ‘நானும் ரௌடிதான்’ படத்தின் மூலம் நிறைவேற்றி வைத்திருக்கிறார் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ். ‘போடா போடி’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;