கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் சரத்குமார்!

கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் சரத்குமார்!

செய்திகள் 2-Dec-2014 5:26 PM IST Chandru கருத்துக்கள்

இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்கவிருக்கிறார்கள். ‘ரோட்டரி இன்டர்நேஷனல் 3230’ என்ற ரோட்டரி கிளப்பின் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அதாவது, மனிதர்கள் ஒன்று கூடி நின்று தேசியக்கொடி போன்ற அமைப்பை உருவாக்கும் நிகழ்ச்சிதான் இது. இதுவரை பாகிஸ்தான் மக்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்கள் நாட்டு தேசியக்கொடியை உருவாக்கியதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்திருக்கிறது. தற்போது சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடி போன்ற தோற்றத்தை உருவாக்கவிருக்கிறார்களாம். இந்த நிகழ்ச்சிக்கு ‘என் கொடி என் இந்தியா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் கொடி நாளான டிசம்பர் 7ஆம் தேதி சென்னை, ஒய்,எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 7 மணி அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நடிகர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, தமிழ் சினிமாவிலுள்ள அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறார். அதோடு, ‘‘தமிழ் சினிமாவிலிருக்கும் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கிறேன். யார் யார் தேசப்பற்றுவர்கள் என்பது அப்போது தெரிந்துவிடும்’’ என இது சம்பந்தமாக இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் சரத்குமார்.

லண்டனிலிருக்கும் ‘கின்னஸ் சாதனை’ அமைப்பினர், இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட்டு சான்றிதழ் வழங்குவதற்காக சென்னைக்கு வரவிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;