மீண்டும் மிரட்ட வரும் ‘விஐபி’ டீம்... தனுஷுக்கு ஜோடி எமி!

மீண்டும் மிரட்ட வரும் ‘விஐபி’ டீம்... தனுஷுக்கு ஜோடி எமி!

செய்திகள் 2-Dec-2014 4:21 PM IST Chandru கருத்துக்கள்

2014ஆம் ஆண்டின் ‘சூப்பர் வசூல் படம்’ என ஒட்டுமொத்த தமிழகமே ஒப்புக்கொண்ட ‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல்முறையாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி முதல் துவங்குகிறது. இப்படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத்.

தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். இப்படத்தைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்திலும், வேல்ராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

‘மாஸ்’ படத்திலிருந்து எமி ஜாக்ஸன் வெளியேறியதாக கூறப்படும் சூழ்நிலையில், உதயநிதி மற்றும் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;