எமி ஜாக்ஸனுடன் ‘கெத்து’ காட்டும் உதயநிதி!

எமி ஜாக்ஸனுடன் ‘கெத்து’ காட்டும் உதயநிதி!

செய்திகள் 2-Dec-2014 3:44 PM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெகதீஷ் இயக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்தைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’, ‘கெத்து’ என இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறார் அவர். இதில் ‘கெத்து’ படத்திற்கான பூஜை தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. ‘மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார். ஹன்சிகா, நயன்தாராவைத் தொடர்ந்து உதயநிதியின் மூன்றாவது நாயகியாகியிருக்கிறார் எமி.

‘கெத்து’ படத்தையும் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் மூலம் உதயநிதியே தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மைனா’, ‘கும்கி’ படங்களில் பணிபுரிந்த சுகுமாரன் ஒளிப்பதிவையும், இமான் இசையமைப்பையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;