‘அம்புலி’, ‘ஆ’ - அடுத்தது?

‘அம்புலி’, ‘ஆ’ - அடுத்தது?

செய்திகள் 2-Dec-2014 3:33 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘ஆ’ திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. ரிலீசான ஓரிரு நாட்களிலேயெ இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் சில தியேட்டரகளில் இப்படத்தை திரையிட்டுள்ளதாக தெரிவித்தனர் இப்படக் குழுவினர். ‘அம்புலி 3டி’ படத்தை தொடர்ந்து ‘ஆ’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இப்படக் குழுவினரின் அடுத்த தயாரிப்பு ‘ஜம்போ 3டி’. குழந்தைகளை குறி வைத்து இப்படத்தை காமெடி படமாக உருவாக்க இருக்கிறார்கள் இயக்குனர்கள் ஹரி – ஹரிஷ். ‘ஓர் இரவு’, ‘அம்புலி 3டி’, ’ஆ’ படங்களை தொடர்ந்து ஹரி - ஹரிஷ் இயக்கும் 4-ஆவது படமான இப்படத்திலும் ‘அம்புலி’ கோகுல் நடிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தையும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை களத்தில் சொல்லப் போகிறார்களாம் இயக்குனர்கள் ஹரியும், ஹரிஷும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டீசர்


;