விஜய், தனுஷை தொடர்ந்து விஷால்

விஜய், தனுஷை தொடர்ந்து விஷால்

செய்திகள் 2-Dec-2014 3:03 PM IST Chandru கருத்துக்கள்

‘ஆம்பள’ படத்தின் பொங்கல் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விஷால். இப்படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறார் எனவும், அதில் விஷாலுக்கு ஜோடியாக மூன்றாவது முறையாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார் எனவும் செய்திகள் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இதில் திடீர் திருப்பமாக லக்ஷ்மி மேனனுக்கு பதில், இப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

‘ஜீவா’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் முதல்முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியிலிருந்து துவங்கவிருக்கிறது. படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘ஜில்லா’ படத்திற்குப் பிறகு காஜல் அகர்வாலுக்கு தமிழில் வேறெந்த படமும் வெளிவரவில்லை. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாரி’ படத்தில் நடிப்பதற்கு ஏற்கெனவே காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;