த்ரிஷா, விவேக்கின் ‘லேசா லேசா’ நினைவுகள்!

த்ரிஷா, விவேக்கின் ‘லேசா லேசா’ நினைவுகள்!

செய்திகள் 2-Dec-2014 12:43 PM IST Chandru கருத்துக்கள்

2003ஆம் ஷாமுக்கு ஜோடியாக ‘லேசா லேசா’ படத்தில் நடித்திருந்தார் நடிகை த்ரிஷா. இப்படத்தில் காமெடியில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார் விவேக். அதன் பிறகு த்ரிஷா நடித்த பல படங்களில் விவேக்கும் காமெடியனாக நடித்திருக்கிறார். ‘லேசா லேசா’ வெளிவந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திலும் த்ரிஷாவும், விவேக்கும் நடிக்கிறார்கள்.

‘‘12 வருடங்களுக்கு முன்பு நான் ‘லேசா லேசா’வில் பார்த்த த்ரிஷா இப்போதும் அப்படியே இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரின் அழகு பல மடங்கு கூடியிருக்கிறது’’ என்று ட்விட்டரில் த்ரிஷாவைப் புகழ்ந்திருக்கிறார் விவேக். பதிலுக்கு த்ரிஷாவும் ‘‘நீங்களும் அப்படியேதான் இருக்கிறீர்கள். நன்றி விவேக்!’’ என பதில் மாலை சூட்டியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;