தஞ்சாவூரில் பாலா, சசிகுமார், வரலட்சுமி!

தஞ்சாவூரில் பாலா, சசிகுமார், வரலட்சுமி!

செய்திகள் 2-Dec-2014 11:33 AM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடந்து வருகிறது. சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். கரகாட்டம் மற்றும் நாதஸ்வரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிப்பது குறித்து வரலட்சுமி ட்வீட் செய்துள்ளதில் ‘‘நான் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாலா சாரின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. பாலா சார் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கரகாட்ட கலையில் நிறைய பயிற்சிகளை எடுத்துள்ளார்களாம் சசிகுமாரும், வரலசுமி சரத்குமாரும்!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;