ஆக்‌ஷன் ஹீரோவாகும் ஜெய்! ‘புகழ்’ கிடைக்குமா?

ஆக்‌ஷன் ஹீரோவாகும் ஜெய்! ‘புகழ்’ கிடைக்குமா?

செய்திகள் 2-Dec-2014 10:48 AM IST VRC கருத்துக்கள்

மென்மையான கேர்கடர்களில் நடித்து வந்த ஜெய், இப்போது அதிரடி ஆக்‌ஷன் கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அதன் துவக்கமாக மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெய். இப்படத்தில் ஜெய் ஏற்று நடிக்கும் கேர்கடர் பெயரும் ‘புகழ்’ தான்! இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ‘இவன் வேற மாதிரி’ புகழ் சுரபி நடிக்கிறார்.

இப்படத்தை தயாரிக்கும் சுஷாந்த் படம் குறித்து கூறும்போது ‘‘வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ, அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருதப்படுபவர் ஜெயிக்க வேண்டும் என நாம் ஆசைப்படுவதுண்டு. அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நபர் தான் இந்தப் படத்தின் புகழ் கேரக்டர்’’ என்றார். இப்படத்தை ‘ஃபிலிம் டிபார்ட்மென்ட்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத், கோவிந்தராஜ் இணைந்து தயரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே ‘புகழ்’ என்ற தலைப்பில் சரத்குமார் நடித்த ஒரு படம் உருவாகி, அது வெளிவராமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;