8ல் அஜித், 9ல் விக்ரம், 14ல் விஷால்?

8ல் அஜித், 9ல் விக்ரம், 14ல் விஷால்?

செய்திகள் 2-Dec-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

மேலே சொல்லப்பட்டிருக்கும் நம்பர்கள்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவை! ஆம்... ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கும் ‘ஐ’ படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதற்கான முன்னோட்டமாக சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை முன்பதிவு செய்து, அதை பத்திரிகை விளம்பரமாகவும் வெளியிட்டுள்ளது ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்கிறார்கள்.

இதனால் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு வராது என்ற ஒரு தகவல் ஒன்றிரண்டு நாட்களாக இணையதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், படத்தை சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்களாம் அஜித்தும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும். குறிப்பாக பொங்கலின் 4 நாள் விடுமுறையில் மிகப்பெரிய வசூல் செய்யும் சாத்தியம் இருப்பதால், அதை விட்டுவிட மனமில்லையாம். கூடவே இதை ஒரு கௌரவப் பிரச்சனை போலவும் மீடியாக்கள் சித்தரிப்பதால், அஜித் தரப்பு பொங்கல் ரிலீஸிற்கு தீவிரம் காட்டி வருகிறார்களாம். இதனால், ‘ஐ’ படத்திற்கு முன்பே அதாவது, சாய்பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையே (ஜனவரி 8) வெளியிட வேண்டும் என்பதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

விஷாலின் ‘ஆம்பள’யைப் பொறுத்தவரை ஜனவரி 14ஆம் தேதியில் ரிலீஸ் என்பது 100% உறுதி என்கிறது அவரின் வட்டாரங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;