இயக்குனர் பிரியதர்சன் - நடிகை லிசி பிரிகிறார்கள்!

இயக்குனர் பிரியதர்சன் - நடிகை லிசி பிரிகிறார்கள்!

செய்திகள் 2-Dec-2014 10:10 AM IST VRC கருத்துக்கள்

மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியவர் பிரியதர்சன். கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் உட்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் லிசி! இவர்கள் இருவரும் 24 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பிறகு லிசி நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பிரியதர்சன் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரியப் போவதாக பேசப்பட்டது. 24 வருட திருமணவாழ்க்கைக்குப் பிறகு இப்போது இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளார்கள்! இது சம்பந்தமாக நடிகை லிசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘நானும் திரு. பிரியதர்சன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நணபர்களும் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து எங்களின் தனியுரிமையை மதித்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரியதர்சன் – லிசி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனப்தும் அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;