ஷங்கரின் ‘கப்பலு’க்கு 'U'... கிறிஸ்துமஸில் வெள்ளோட்டம்?

ஷங்கரின் ‘கப்பலு’க்கு 'U'... கிறிஸ்துமஸில் வெள்ளோட்டம்?

செய்திகள் 2-Dec-2014 9:54 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் ‘ஐ’ பொங்கல் ரிலீஸுக்கான வேலைகள் என்றால், இன்னொருபுறம்... தான் வாங்கி வெளியிடவிருக்கும் ‘கப்பல்’ படத்தின் ரிலீஸ் வேலைகள் என இயக்குனர் ஷங்கர் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வருகிறார். தன்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்திக் ராஜு இயக்கும் ‘கப்பல்’ படத்தை பார்த்த உடனே, வாங்கி வெளியிடுவது என்ற முடிவுக்கு வந்தார் ஷங்கர். அதோடு விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் என தமிழ் சினிமாவின் உச்ச பிரபலங்களை அழைத்து வந்து ‘கப்பல்’ படத்தின் ஆடியோ விழாவையும் மிகப்பிரம்மாண்டமாக நடத்தி கோடம்பாக்கத்தை மிரள வைத்தார்.

இந்நிலையில் ‘கப்பல்’ படம் சென்சார் அதிகாரிகளுக்கு நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு. ஜனவரிக்குப் பிறகு பெரிய படங்கள் பல வரிசை கட்டி ரிலீஸிற்குக் காத்திருப்பதால் இந்த டிசம்பரிலேயே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். இதனால் கிறிஸ்துமஸ் வெளியீடாக படத்தை ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகிறதாம் ‘கப்பல்’ டீம்!

ஏற்கெனவே இசை, கயல், எனக்குள் ஒருவன், வெள்ளக்காரதுரை, மீகாமன் ஆகிய 5 படங்கள் கிறிஸ்துமஸ் வெளியீட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;