டிசம்பர் 5... ‘ஐ’ படத்துக்கு முக்கிய நாள்!

டிசம்பர் 5... ‘ஐ’ படத்துக்கு முக்கிய நாள்!

செய்திகள் 2-Dec-2014 9:49 AM IST Chandru கருத்துக்கள்

சென்னை திரையரங்குகளை மொத்தமாக வளைத்துப்போட்டு ஜனவரி 9ஆம் தேதிக்காக காத்திருக்கிறது ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளன. அதோடு, படத்தின் டீஸரும் உலகமெங்கும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, இதுவரை எந்த தென்னிந்தியப் படத்தின் டீஸரையும் பார்க்காத எண்ணிக்கையில் (88 லட்சம்) கண்டுகளித்துள்ளார்கள். இந்நிலையில் வரும் 5ஆம் தேதி ‘ஐ’ படத்திற்கு இன்னொரு முக்கியமான நாள். ஆம்... அன்றைய தினம்தான் சென்சாருக்குச் செல்கிறது இப்படம்.

ஆக்ஷன் காட்சிகள், விக்ரமின் கோரமான முகம் ஆகியவற்றை எல்லாம் தாண்டி இப்படம் ‘யு’ சர்டிஃபிகேட் வாங்க வேண்டும் என்பதுதான் தற்போது ‘ஐ’ படக்குழுவினரின் எதிர்பார்ப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;