மலையாளத்துக்கு போகும் அர்ஜுன்!

மலையாளத்துக்கு போகும் அர்ஜுன்!

செய்திகள் 1-Dec-2014 4:55 PM IST VRC கருத்துக்கள்

அர்ஜுன் இயக்கி, தயாரித்து, நடித்து சமீபத்தில் ரிலீசான படம் ‘ஜெய்ஹிந்த் 2’. இப்படம் வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்து மலையாள படமொன்றில் நடிக்க இருக்கிறார் அர்ஜுன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மலையாளத்தின் இளம் முன்னணி நடிகரான ஆசிஃஃப் அலி ஹீரோவாக நடிக்க, கதாநாயகனுக்குரிய ஒரு முக்கிய கேரக்டரில் அர்ஜுனும் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் கதை திரைக்கதை எழுதிய பாபி, சஞ்சய் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுத, வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கி மைசூர், பூனா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;