லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி!

லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி!

செய்திகள் 1-Dec-2014 3:47 PM IST VRC கருத்துக்கள்

சௌந்தரயா ரஜினிகாந்த இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை விநியோகம் செய்ததில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்த டாக்டர் முரளி மனோகர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

‘‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் இணைந்து, நவீன தொழில்நுபத்தில் தயாரித்த படம் ‘கோச்சடையான்’. இப்படம் வெளியாகும் முன் மீடியா ஒன் நிறுவனம் ஆட்பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடமிருந்து 33 கோடி ரூபாய் கடன் வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஆட்பீரோ நிறுவனம் அளித்த வாக்குறுதிபடி 30 கோடி ரூபாய் ஏற்பாடு செய்ய தவறிவிட்டது. ஆட்பீரோ 10 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது. இதானல் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் தள்ளி வைக்கப்பட்டது.
மீடியா ஒன் நிறுவனம் 10 கோடி ரூபாயில் 4.75 கோடியை திருப்பதி செலுத்திய நிலையில் மற்றொரு 4 கோடி வங்கி வரைவோலையாக செலுத்தியது. மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துளளது. ஆட்பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது.

மேலும் இந்த தகவலை பத்திரிகைகளுக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் லதா ரஜினிகாந்தை அவமானப்படுத்தியது. இந்த பண பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் ஒருபோதும் தலையிடவில்லை. ஆட்பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த கொடுக்கவில்லை. அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அவை இந்த பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை.

இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்தை சம்பந்தப்படுத்த காரணம் அவருக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், அவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;