மீண்டும் லிங்குசாமியுடன் விஷால்!

மீண்டும் லிங்குசாமியுடன் விஷால்!

செய்திகள் 1-Dec-2014 3:05 PM IST VRC கருத்துக்கள்

தற்போது சுந்தர்.சி.இயக்கத்தில் ‘ஆம்பள’ படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு சுசீந்திரனும், விஷாலும் இணையும் இப்படத்தில் விஷாலுடன் ‘பாண்டியநாடு’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்த லட்சுமி மேனனே விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சுசீந்திரன் இயக்கும் படம் முடிந்ததும் விஷால் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி’ படத்தில் நடித்துள்ளார் விஷால். லிங்குசாமியும் விஷாலும் மீண்டும் இணையும் இப்படம் ‘சண்டக்கோழி’யின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் ‘அஞ்சான்’ படத்தை இயக்கிய லிங்குசாமி, கார்த்தியை வைத்து ‘எண்ணி ஏழு நாட்கள்’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் விஷால் நடிக்கும் படத்தின் வேலைகள் ஆரம்பமாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;