ரீமேக்கில் விருப்பமில்லை! - ‘கத்தி’யை மறுக்கும் மகேஷ்பாபு

ரீமேக்கில் விருப்பமில்லை! - ‘கத்தி’யை மறுக்கும் மகேஷ்பாபு

செய்திகள் 1-Dec-2014 2:09 PM IST Chandru கருத்துக்கள்

‘போக்கிரி’, ‘கில்லி’ படங்கள் விஜய்யின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள். இவை இரண்டுமே தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட் ஆன படங்களின் ரீமேக் ஆகும். தொடர்ந்து ரீமேக் படங்களாக நடித்து வந்த விஜய், சமீபகாலமாக நேரடித் தமிழ்ப் படங்களை செய்கிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடித்து சூப்பர்ஹிட்டான ‘கத்தி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் ஆந்திராவை கடுமையாக தாக்கிய ‘ஹுட் ஹுட்’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் தெலுங்கு திரையுலகம் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் மகேஷ்பாபுவை சமந்தா பேட்டி எடுப்பதுபோல் ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார்கள். அப்போது ‘‘நீங்கள் சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம் எது?’’ என்ற கேள்வியை மகேஷ்பாபுவிடம் கேட்டார் சமந்தா. அதற்கு பதில் அளித்த மகேஷ்பாபு,

‘‘விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை நான் மிகவும் விரும்பிப் பார்த்தேன். விஜய் மிக அற்புதமாக நடித்திருந்தார். படமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. என்னை இப்படத்தின் ரீமேக்கில் நடிக்கச் சொல்லி சில அழைப்புகள் வந்தன. ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் ஒரு மொழியில் ஹிட்டான படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது அதே அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ‘கத்தி’ என்றால் விஜய்தான் ஞாபத்திற்கு வருவார். நான் எதை செய்தாலும், அது ‘கத்தி’யில் விஜய் செய்ததையே பிரதிபலிக்கும். இதுபோன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;