‘லிங்கா’வுடன் வெளியாகும் யாரோ ஒருவன்!

‘லிங்கா’வுடன் வெளியாகும் யாரோ ஒருவன்!

செய்திகள் 1-Dec-2014 1:57 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’ படம் வருகிற 12-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமான முறையில் ரிலிசாகவிருக்கிற நிலையில், அன்றைய தினம் ‘யாரோ ஒருவன்’ என்ற படத்தை துணிச்சலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் அப்படக் குழுவினர்! ‘நவகிரகா சினி ஆர்ட்ஸ்’ நிறுவன்ம் தயாரித்துள்ள இப்படத்தில் புதுமுகங்கள் ராம், ஆதிரா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை ஆகிய பொறுப்புக்களுடன் படத்தை இயக்கியிருப்பவர் கே.என்.பைஜு. இப்படத்தை ரஜினியின் ‘லிங்கா’ வெளியாகிற தினத்தன்று ரிலீஸ் செய்வது குறித்து இயக்குனர் பைஜு பேசும்போது.

‘‘12-ஆம் தேதி ‘லிங்கா’ படம் ரிலீசாவது உறுதியாகிவிட்டது. அன்றைய தினம் எங்களது ‘யாரோ ஒருவன்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். ‘லிங்கா’ அதிகபடியான தியேட்டர்களில் வெளியாகும் என்றாலும். அப்படம் திரையிடப்படாத திரையரங்குகளில் எங்கள் படத்தை திரையிடுவோம். இப்போதுதான் எங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். ஏனென்றால் ரஜினி சாரின் ‘லிங்கா’ படத்துடன் வேறு எந்தப் படமும் ரிலீசாவதாக எங்களுக்கு தெரியவில்லை. அதனால் நாங்கள் எங்கள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;