‘லிங்கா’வுடன் ரிஸ்க் எடுக்கும் மிஷ்கினின் பிசாசு!

‘லிங்கா’வுடன் ரிஸ்க் எடுக்கும் மிஷ்கினின் பிசாசு!

செய்திகள் 1-Dec-2014 12:25 PM IST Chandru கருத்துக்கள்

முதல்முறையாக பேய்ப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டு«டியாஸ்’ தயாரிக்கும் ‘பிசாசு’ படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அரோல் கொரலி எனும் அறிமுகம் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ராய் ஒளிப்பதிவு செய்கிறார். மொத்தம் இரண்டு பாடல்கள் மட்டுமே கொண்ட ‘பிசாசு’ படத்தின் ஆடியோ சிடி விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வரும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ‘லிங்கா’ படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால் அதற்கு முந்தைய வாரமான டிசம்பர் 5ஆம் தேதியும், அடுத்த வாரமான டிசம்பர் 19ஆம் தேதி வேறு எந்தப் படங்களும் இன்னும் ரிலீஸை அறிவிக்கவில்லை. ஏனென்றால் ரஜினி படத்திற்காக பெரும்பாலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் சூழில், மற்ற படங்கள் வெளியானாலும் குறைந்தளவு தியேட்டர்களே கிடைக்கும் என்பதால்தான். நிலைமை இப்படியிருக்க தைரியமாக ‘லிங்கா’ ரிலீஸைத் தொடர்ந்து தங்களது ‘பிசாசு’ படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் பாலாவும், மிஷ்கினும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;