ஆச்சரியமூட்டும் ‘விஜய் 58’ ரகசியங்கள்!

ஆச்சரியமூட்டும் ‘விஜய் 58’ ரகசியங்கள்!

செய்திகள் 1-Dec-2014 11:55 AM IST Chandru கருத்துக்கள்

தனது கேரியரில் இதுவரை செய்யாத பல பரிசோதனை முயற்சிகளை சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக மேற்கொள்ளவிருக்கிறாராம் நடிகர் விஜய். பொதுவாகவே கெட்அப் விஷயங்களில் விஜய் ரொம்பவும் மெனக்கெடவே மாட்டார். ஒரு காலம் வரைக்கும் மீசையோடு நடித்துக் கொண்டிருந்தவர், ‘திருமலை’ படத்தில் மீசையை எடுத்து நடித்தார். அதன் பிறகு லேசான தாடி, மீசையுடன் நடிப்பது மட்டுமே விஜய்யின் கெட்அப் வித்தியாசங்கள். ஆனால், தற்போது ‘விஜய் 58’ படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், இரண்டு கேரக்டருக்கும் நிறைய கெட்அப் சேஞ்ச் செய்யவிருக்கிறாராம்.

ஃபேன்டஸி படமாக உருவாகும் இப்படத்தில், இரண்டு காலகட்டங்களில் பயணிப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒன்று மன்னர் கால வரலாற்று யுகம், மற்றொன்று டெக்னாலஜி யுகம். இதில் மன்னர் யுகத்தில் நடிக்கும் விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த குள்ள விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறாராம். மன்னர் யுகத்தின் சாம்ராஜ்ஜியம் ஒன்றின் ராணியாக ஸ்ரீதேவியும், அவரது தளபதியாக சுதீப்பும் நடிக்கிறாராம். இந்த போர்ஷனுக்கான படப்பிடிப்புதான் தற்போது ஈசிஆரில் நடைபெற்று வருகிறது.

டெக்னாலஜி வளர்ச்சியடைந்த இன்னொரு யுகம் படத்தின் இரண்டாம் பாதியில் வருமாம். இந்த இரண்டாவது விஜய் கேரக்டர் ரொம்பவும் ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸிங் என எல்லாவற்றிலும் இதுவரை பார்க்காத புதுவித விஜய்யைப் பார்க்கலாம் என்கிறார்கள். அதோடு இந்த கேரக்டருக்காக கான்டாக்ட் லென்ஸும் அணிந்திருப்பாராம். இந்த விஜய் கேரக்டருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

பட்ஜெட், மேக்கிங், கிராஃபிக்ஸ் என எல்லாவிதத்திலும் விஜய்யின் கேரியரிலேயே இப்படம் மிகப்பெரியதாக இருக்கும் என்கிறது ‘விஜய் 58’ வட்டாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;