கிறிஸ்துமஸ் ரேஸில் இணைந்தது ‘வெள்ளக்கார துரை’

கிறிஸ்துமஸ் ரேஸில் இணைந்தது ‘வெள்ளக்கார துரை’

செய்திகள் 1-Dec-2014 10:19 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருட கிறிஸ்துமஸிற்கு தங்களது படங்களை ரிலீஸ் செய்ய கோடம்பாக்கத்தில் பெரிய போட்டாபோட்டியே நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சித்தார்த்தின் ‘எனக்குள் ஒருவன்’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’, பிரபுசாலமனின் ‘கயல்’, ஆர்யாவின் ‘மீகாமன்’ ஆகிய படங்கள் தங்களின் கிறிஸ்துமஸ் ரிலீஸை உறுதிப்படுத்தியிருக்கின்றன. சிம்புவின் ‘வாலு’வும் கிறிஸ்துமஸிற்குதான் ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதிக்கு இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 4 படங்கள் களத்தில் இருக்கும்போது, 5வதாக விக்ரம் பிரபுவின் ‘வெள்ளக்காரதுரை’யும் கிறிஸ்துமஸ் வெளியீட்டில் களமிறங்கியிருக்கிறது.

‘தேசிங்கு ராஜா’ படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கும் ‘வெள்ளக்காரதுரை’ படம் விக்ரம் பிரபுவின் கேரியரில் 5வது படமாகும். ஏற்கெனவே ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’, ‘சிகரம் தொடு’ ஆகிய 4 படங்கள் அவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கின்றன. ‘வெள்ளக்காரதுரை’யில் விக்ரம் பிரபுவக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இமான் இசையமைப்பில் உருவாகிவரும் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;