சென்னையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த ‘ஐ’

சென்னையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த ‘ஐ’

செய்திகள் 29-Nov-2014 5:07 PM IST Chandru கருத்துக்கள்

ரிலீஸ் பரபரப்புக்கு ஆளாகிவிட்டது ‘ஐ’ படம். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்திற்காக தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்கள் முன்பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 700க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளிவரலாம் என்கிறார்கள். அதன் முதல்கட்டமாக சென்னை சிட்டியில் ‘ஐ’ படம் வெளியாகவிருக்கும் தியேட்டர் பட்டியலை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பட்டியல் இதோ...

1. சத்யம்
2. சாந்தம்
3. ஸ்டுடியோ 5
4. எஸ்கேப் (மொத்தமிருக்கும் 8 ஸ்கிரீன்களிலும்)
5. ஐநாக்ஸ், மைலாப்பூர் (ஸ்கிரீன் 1, 2, 3)
6. சத்யம், பெரம்பூர் (ஸ்கிரீன் 1, 2, 3, 4)
7. தேவி, தேவி பாலா, தேவி கலா
8. சாந்தி, சாய் சாந்தி
9. ஆல்பட், பேபி ஆல்பட்
10. அபிராமி, ஸ்வர்ணசக்தி அபிராமி, அன்னை அபிராமி
11. பிவிஆர் (ஸ்கிரீன் 1, 2, 3)
12. ஈகா, அனு ஈகா
13. உதயம், மினி உதயம்
14. ஏவிஎம் ராஜேஷ்வரி
15. மகாராணி
16. கமலா (ஸ்கிரீன் 1, 2)
17. பாரத்
18. சத்யம், வேளச்சேரி (ஸ்கிரீன் 1, 2, 3, 4, 5)

‘ஐ’ படம் இத்தனை திரையரங்குகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதால், 8ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் அன்றைய தினம் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தெரிகிறது. அனேகமாக ‘என்னை அறிந்தால்’, ‘ஆம்பள’ படங்கள் ஜனவரி 15ஆம் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;