விஜய்யிடமிருந்து திடீர் போன்... சித்தார்த் சர்ப்ரைஸ்!

விஜய்யிடமிருந்து திடீர் போன்... சித்தார்த் சர்ப்ரைஸ்!

செய்திகள் 29-Nov-2014 4:51 PM IST Chandru கருத்துக்கள்

வசந்த பாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, நாசர் ஆகியோர் நடிப்பில் நேற்று (நவ 28) வெளியான ‘காவியத்தலைவன்’ படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ‘ஜிகர்தண்டா’ இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், நடிகை சமந்தா, ‘யுடிவி’ தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் நேற்று ட்விட்டரில் வாழ்த்து பொழை பொழிந்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சித்தார்த்தும் ட்வீட் செய்தார்.

இந்நிலையில், திடீரென்று இன்று ‘இளையதளபதி’ விஜய்யிடமிருந்து போன் வரவே பரபரப்பானாரம் சித்தார்த். ‘காவியத்தலைவன்’ படத்தை தான் பார்த்ததாகவும், ரொம்பவும் பிடித்திருந்ததாகவும் சித்தார்த்திடம் கூறிய விஜய், படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை தன் ‘ட்வீட்’டில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;