‘வாலு’ ரிலீஸ்... மீண்டும் தள்ளிவைப்பு!

‘வாலு’ ரிலீஸ்... மீண்டும் தள்ளிவைப்பு!

செய்திகள் 29-Nov-2014 3:21 PM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சிம்பு ஹீரோவாக நடித்த ‘வாலு’ திரைப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகப் போவதாக சிம்பு அறிவித்திருந்தார். இந்நிலையில், ‘வாலு’ படத்தின் ரிலீஸை அடுத்த வருடம் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்களாம். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் பிப்ரவரி 3ஆம் தேதிதான் சிம்புவின் பிறந்தநாளும்.

டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் ‘லிங்கா’வும், ஜனவரி 9ஆம் தேதி ஷங்கரின் ‘ஐ’ படமும் வரவிருப்பதால், ‘வாலு’ படத்தின் ரிலீஸை இந்த இரண்டு படங்களின் ரிலீஸிற்குப் பின்பு வைத்துக் கொள்ளலாம் என சிம்புவிடம் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி கேட்டிருக்கிறார். அவரின் முடிவு சரியெனப்படவே சிம்புவும் அதற்கு சம்மதித்திருக்கிறார். அதோடு தன்னுடைய முந்தைய படங்களின் ஹிட்களை எல்லாம் ‘வாலு’வின் வெற்றி மிஞ்சும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக இப்படத்தில் ஹன்சிகா நடித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கியிருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இசை எஸ்.எஸ்.தமன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;