ஜி.வி.பிராஷ்குமார் அடுத்து நடிக்கும் படம்!

ஜி.வி.பிராஷ்குமார் அடுத்து நடிக்கும் படம்!

செய்திகள் 29-Nov-2014 1:13 PM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’ படங்களை தொடர்ந்து ஜான்மேக்ஸ் தனது ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘மொசக்குட்டி’. இப்படம் நேற்று (28-11-14) வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறும் ஜான்மேக்ஸ் அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தை பவன் ராஜ்குமார் என்ற புதிய இயக்குனர் இயக்குகிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞ்ரகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்போது ‘பென்சில்’, ‘டார்லிங்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதில் ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;