ஜீவா சங்கரின் உதவியாளர் இயக்கும் ‘களம்’

ஜீவா சங்கரின் உதவியாளர் இயக்கும் ‘களம்’

செய்திகள் 29-Nov-2014 1:13 PM IST VRC கருத்துக்கள்

‘அருள் மூவீஸ்’ பி. கே . சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'களம்'. இப்படத்தை புதுமுக இயக்குநர் ராபர்ட்.எஸ். ராஜ் இயக்கி உள்ளார். சுபீஷ் கே. சந்திரன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். இப்படத்திற்கு 'ஆந்திர மெஸ்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரகாஷ் நிக்கி இசை அமைத்துள்ளார்.

இயக்குநர் ராபர்ட் இப்படம் குறித்து பேசும்போது, "இப்படம் வழக்கமான திரைக்கதையிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இக்கதை எந்த வகையானது என்று கணிப்பது கஷ்டம். இப்படத்தின் கதை கருதான் தான் என்னை இப்படத்தை இயக்க தூண்டியது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும். ஒரு வீட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் 'வெண்ணிலா கபடி குழு' ஸ்ரீநிவாசன் , 'சுட்ட கதை' நாயகி லக்ஷ்மி ப்ரியா, 'கோலி சோடா' மதுசூதனன், எஸ்.எஸ்.மியூசிக் புகழ் பூஜா, ஹம்ஜத் மற்றும் கனி நடித்துள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். இயக்குனர் ராபர்ட், 'நான்' படப் புகழ் ஜீவா சங்கரின் இணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;