4வது ஷெட்யூலில் ஜெயம் ரவியின் ‘அப்பா டக்கர்’

4வது ஷெட்யூலில் ஜெயம் ரவியின் ‘அப்பா டக்கர்’

செய்திகள் 29-Nov-2014 11:19 AM IST Chandru கருத்துக்கள்

அலெக்ஸ்பாண்டியன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா, சூரி ஆகியோர் நடிக்கும் ‘அப்பா டக்கர்’ படத்தை இயக்கி வருகிறார் சுராஜ். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு யு.கே.செந்தில்குமார்.

கடந்த ஜூலையில் சென்னையில் படப்பிடிப்பைத் துவங்கிய இப்படம், அதன் பிறகு பாண்டிச்சேரியில் சில பகுதிகளில் தனது இரண்டாவது ஷெட்யூலை முடித்தது. பின்னர் ஜெயம் ரவி, சூரி, அஞ்சலி ஆகியோர் பங்குபெற்ற 3வது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் நடைபெற்றது.

3 ஷெட்யூலையும் வெற்றிகரமாக முடித்த ‘அப்பா டக்கர்’ டீம் அடுத்ததாக பொள்ளாச்சிக்கு செல்லவிருக்கிறது. இந்த 4வது ஷெட்யூலில் த்ரிஷா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் படமாக்கப்படும் என்கிறார்கள். அதோடு படத்தின் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

இப்படத்தில் நடிகை பூர்ணா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;