2014ல் ஹாட்ரிக் அடிக்கும் சித்தார்த்!

2014ல் ஹாட்ரிக் அடிக்கும் சித்தார்த்!

செய்திகள் 29-Nov-2014 11:01 AM IST Chandru கருத்துக்கள்

கொஞ்ச காலம் தமிழ் சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகர் சித்தார்த் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘180’ படம் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பினார். அதன் பிறகு 2012ல் ‘காதலில் சொதப்புவது எப்படி’, 2013ல் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே தமிழில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனால் சித்தார்த்தின் கைகளில் மளமளவென படங்கள் குவியத் தொடங்கின.

இந்த 2014ல் மட்டும் ஏற்கெனவே சித்தார்த்திற்கு இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. ‘பீட்சா’ கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு விமர்சனரீதியாக பாராட்டுக்கள் குவிந்தன. அதைத் தொடர்ந்து நேற்று (நவ 28) வசந்த பாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் ‘காவியத்தலைவன்’ படம் உலகமெங்கும் வெளியாகியது. இப்படத்திற்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இப்படத்தில் சித்தார்த்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்தார்த் நடிக்கும் ‘லூசியா’ கன்னட ரீமேக்கான ‘எனக்குள் ஒருவன்’ படமும் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்போவதாக ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் அறிவித்திருக்கிறது. கன்னடத்தில் ‘லூசியா’விற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால், தமிழிலும் ‘எனக்குள் ஒருவன்’ படத்திற்கு பெரியஅளவில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். ஆக... 2014ல் ‘ஹாட்ரிக் வெற்றி’யை சுவைக்கக் காத்திருக்கிறார் நடிகர் சித்தார்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;