பொங்கலுக்கு முந்தும் ஷங்கரின் ‘ஐ’ ரிலீஸ்

பொங்கலுக்கு முந்தும் ஷங்கரின் ‘ஐ’ ரிலீஸ்

செய்திகள் 29-Nov-2014 10:46 AM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவிலேயே முதல்முறையாக ‘ஐ’ படத்தின் டீஸருக்குதான் ‘யு டியூப்’பில் 87 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். விரைவில் இந்தத் தொகை 1 கோடியைத் தொடும் என்று நம்பப்படுகிறது. ஷங்கரின் பிரம்மாண்டம், விக்ரமின் கடின உழைப்பு, ரஹ்மானின் மேஜிக்கல் மியூசிக், ஹாலிவுட்டுக்கு இணையான கிராபிக்ஸ் யுக்திகள் என படத்தின் ஒவ்வொரு விஷயங்களும் படத்தை திரையில் ‘எப்போது பார்ப்போம்.. எப்போது பார்ப்போம்’ என்ற ஆவலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

தீபாவளிக்கே வெளியாக வேண்டிய படம் தற்போது பொங்கலுக்கு வெளியீடு என அதிகாரபூர்வமாக ஒரு சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கலுக்கு முன்பே அதாவது ஜனவரி 9ஆம் தேதியே ‘ஐ’ படத்தை உலகமெங்கும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ‘ஐ’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மதுரை அழகர் ஃபிலிம்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. அதேபோல் கோவை ஏரியாவின் திரையரங்க வெளியீட்டு உரிமையை மட்டும் காஸ்மோ ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘ஐ’ படம் 9ஆம் தேதி வெளியாகுமென்பதால் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறபப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி விஷாலின் ‘ஆம்பள’ படமும் கோதாவில் குதிக்கிறது.

டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘லிங்கா’ தமிழ் சினிமாவின் பல ரெக்கார்டுகளை உடைக்கக் காத்திருக்கிறதென்றால், ‘லிங்கா’வின் ரெக்கார்டுகளை ‘ஐ’ உடைக்கும் என்ற நம்பிக்கை கோடம்பாக்கத்தில் உலவுகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;