சூப்பர் ஸ்டார் தத்தெடுத்த சமூக ஆர்வலர்!

சூப்பர் ஸ்டார் தத்தெடுத்த சமூக ஆர்வலர்!

செய்திகள் 29-Nov-2014 10:41 AM IST VRC கருத்துக்கள்

எம்.ஆர்.தியேட்டர் - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘பெருமாள் கோயில் உண்டசோறு’. சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ் ராஜா, ‘ஹரே ராம்’ சக்கரவர்த்தி, அகிலா என இப்படத்தில் நடிக்கும் அத்தனை பேருமே புதுமுகங்கள் தான். இப்படத்தை எழுதி இயக்கும் வி.டி.ராஜா படம் குறித்து கூறும்போது,
‘‘படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும்.

அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவை தான். சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக் தான். இதை தான் இப்படத்தின் மூலம் சொல்கிறோம். டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை கமலா தியேட்டரில் நடைபெறவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் O.P.கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் பேராசிரியராக வேலை செய்தபோது தனது சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தவர். அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா 30கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்கு கொடுத்து விட்டார்.

உயரிய இவரது சமூகசேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார். .அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார். அதையும் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்ட நல்ல உள்ளத்தை அழைத்தபோது உடனே ஒத்துக்கொண்டது பெருமையான விஷயம். அப்படிப்பட்டவர் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள்’’ என்றார்.

‘பெருமாள் கோயில் உண்டச் சோறு’ படத்திற்கு டி.ஜே.ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ஆர்.கார்த்திக் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;