ஆ - விமர்சனம்

‘ஆ’வில் ‘ஆஹா’ இல்லை!

விமர்சனம் 29-Nov-2014 10:30 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : கே.டி.வி.ஆர். கிரியேட்டிவ் ஃபிரேம்ஸ்
நடிகர்கள் : ‘அம்புலி’ கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர்
இயக்கம் : ஹரி - ஹரிஷ்
ஒளிப்பதிவு : சதீஷ்.ஜி
இசை : கே.வெங்கட் பிரபு சங்கர்
பின்னணி இசை : சாம் சி.எஸ்.
எடிட்டிங் : ஹரி சங்கர்

‘அம்புலி 3டி’ பட டீமின் அடுத்த படைப்பாக வந்துள்ள இந்த ‘ஆ’ ஆச்சரியப்படுத்தியிருக்கிறதா?

கதைக்களம்

‘அம்புலி’ கோகுல்நாத், பாலா, மேக்னா ஆகிய நண்பர்கள் பேய் இருக்கிறது என்று நம்புபவர்கள். பெட் கட்டுவதையே தொழிலாகக் கொண்ட சிம்ஹாவோ பேய் இலை என்று அடித்து கூறுபவர். பேய் இருப்பதாக நிரூபித்தால் பெரும் தொகை தருவதாக நண்பர்களிடம் பெட் கட்டுகிறார் சிம்ஹா. பணத்திற்கு ஆசைப்பட்டு பேய் இருப்பதை நிரூபிக்க களத்தில் குதிக்கும் அந்த மூவர் கூட்டணி கடலில் இருக்கும் பேய், ஜப்பான் நாட்டில் இருக்கும் பேய், துபாய் நாட்டு பேய், ஏ.டி.எம்.பேய் என வரிசையாக ஒவ்வொரு பேய்களாக படம் பிடிக்க செல்லும்போது சந்திக்கும் திகில் அனுவபங்கள்தான் ‘ஆ’.

படம் பற்றிய அலசல்

இரவு நேரத்தில் கடல் பேயை வீடியோ படம் பிடிக்கச் சென்ற மூவரையும் அந்த பேய் விரட்டியடிக்க, தப்பித்தால் போதும், உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்கள் அரண்டு ஓடுவதிலிருந்து துவங்குகுகிறது ஆ. வழக்கமான பேய் படங்களிலிருந்து, வித்தியாசப்படுத்தி எடுக்க முயன்றதற்காகவே இரட்டை இயக்குனர்கள் ஹரி, ஹரிஷுக்கு ‘ஸ்பெஷல் பொக்கே’ கொடுக்கலாம்.

ஆனால் ஒரு திகில் படத்திற்கே உரிய பயமுறுத்தும் காட்சிகளோ, அதிர்ச்சி தரும் காட்சிகளோ படத்தில் இடம்பெறாததுதான் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் துபாய் பேய் செய்யும் அட்டகாசமும், பெட்டில் ஜெயிக்கும் சிம்ஹாவின் முடிவும் அசத்தல். படத்தின் கதையோட்டத்திற்கு எடிட்டிங், இசை, கிராஃபிக்ஸ் முதலான விஷயங்கள் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்களில் சிம்ஹாவின் நடிப்பு டாப் ரகம்!

பலம்

1. வழக்கமான பேய் படமாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருப்பது.
2. படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்
3. க்ளைமேக்ஸ்

பலவீனம்

1. திகில் படங்களுக்கான விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லாதது
2. காமெடியைச் சேர்க்க இடமிருந்தும் அதை தவறவிட்டிருப்பது.

மொத்தத்தில்..

பேய் பட விரும்பிகள் மட்டும் ‘விசிட்’ அடிக்கலாம்!

ஒருவரி பஞ்ச் : ‘ஆ’வில் ‘ஆஹா’ இல்லை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;