டிசம்பர் 10-ல் ‘வை ராஜா வை’

டிசம்பர் 10-ல் ‘வை ராஜா வை’

செய்திகள் 29-Nov-2014 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘3’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ஆம் தேதி சென்னை வில்லிவாக்கத்திலுள்ள ஏ.ஜி.எஸ்.தியேட்டரில் நடைபெறவிருக்கிறது.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவன்ம் சார்பில் ‘கல்பாத்தி’ எஸ்.அகோரம் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வரும் இரண்டாவது படம் இது என்பதால் இப்படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;