அஜித் வழியில் சிவகார்த்திகேயன்!

அஜித் வழியில் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 28-Nov-2014 6:30 PM IST Chandru கருத்துக்கள்

‘மான் கராத்தே’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘காக்கி சட்டை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் ஆ.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே அறிவித்தபடி தற்போது ‘காக்கி சட்டை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 49 வினாடிகள் ஓடும் இந்த மோஷன் போஸ்டர், சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் ‘என்னை அறிந்தால்...’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தது போன்ற உணர்வைத் தந்திருக்கிறது. அந்த போஸ்டரில் அஜித் வெள்ளை சட்டை, காக்கி பேன்டில் கம்பீரமாக ‘என்ஃபீல்டு புல்லட்’டில் ஸ்டைலாக உட்கார்ந்திருப்பது போல உருவாக்கியிருந்தார்கள். இந்த ‘காக்கி சட்டை’யின் மோஷன் போஸ்டரிலும் சிவகார்த்திகேயன் இதே ஸ்டைலில்தான் தோன்றியிருக்கிறார்.

படத்தின் ஆடியோ டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;