‘பில்லா 2’, ‘கத்தி’ சாதனையை முறியடித்த லிங்கா!

‘பில்லா 2’, ‘கத்தி’ சாதனையை முறியடித்த லிங்கா!

செய்திகள் 28-Nov-2014 4:55 PM IST Chandru கருத்துக்கள்

பெரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது டிசம்பர் 12. கொண்டாட்டத்திற்கு காரணம் சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் என்பது மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘லிங்கா’ படத்தின் ரிலீஸும் அன்றுதான் என்பதால்தான். ரஜினி படங்கள் என்றாலே, படம் ஆரம்பிக்கும்போதே வியாபாரமும் சூடு பிடித்துவிடும். தமிழ்நாட்டைத் தவிர்த்த மற்ற ஏரியாக்களையும், வட இந்தியா, வெளிநாடு ஆகியவற்றின் வெளியீட்டு உரிமையை ‘ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. இதுவரை எந்த தமிழ்படத்திற்கும் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதில்லையாம்.

அதேபோல், ‘லிங்கா’வின் தமிழக வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் ஒரு சாதனைதான். வேந்தர் மூவிஸிடமிருந்து கோவை ஏரியாவின் வெளியீட்டு உரிமையை சுக்ரா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது. திருப்பூர், ஈரோடு, உதகை, கோவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஏரியாவின் வெளியீட்டு உரிமையை மட்டுமே அந்நிறுவனம் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் கொடுத்து வேந்தர் மூவிஸிடமிருந்து வாங்கியிருக்கிறதாம். இதற்கு முன்பு ‘கத்தி’ படத்திற்கு கொடுக்கப்பட்ட 8.5 கோடி ரூபாய்தான் இந்த ஏரியாவின் அதிகபட்ச ரைட்ஸ் தொகை. இதனை ‘லிங்கா’ இப்போது முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

அதேபோல் ‘லிங்கா’வின் வெளியீடும் மிகப் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு வருகிறதாம். தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 850 தியேட்டர்களில் (தோராயமாக) 700க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘லிங்கா’வை ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கு முன்பு, ‘பில்லா 2’, ‘எந்திரன்’ படங்கள்தான் 500க்கும் மேற்பட்ட திரையரங்குளில் தமிழகத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸிற்கு முன்பே சாதனை படைத்து வரும் ‘லிங்கா’, ரிலீஸிற்குப் பிறகு வசூலிலும் பல சாதனைகள் படைக்கும் என்று நம்பப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;