விஜய் வசந்துடன் இணையும் பவர் ஸ்டாரின் நாயகி!

விஜய் வசந்துடன் இணையும் பவர் ஸ்டாரின் நாயகி!

செய்திகள் 28-Nov-2014 2:23 PM IST VRC கருத்துக்கள்

விஜய் வசந்த் நடித்த, ‘என்னமோ நடக்குது’ படத்தை இயக்கிய ராஜபாண்டி அடுத்து இயக்கும் படம் ‘சிகண்டி’. இப்படத்திலும் விஜய் வசந்தே கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுடன் ‘புலி’ படத்தில் நடித்த நிகிஷா பட்டேல் நடிக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிக்க இருக்கிறாராம். பள்ளி கல்வி சம்பந்தமான பல புதிய விஷயங்களை இப்படத்தில் பதிவு செய்ய இருக்கிறாராம் இயக்குனர் ராஜபாண்டி! ‘என்னமோ நடக்குது’ படத்தை தயாரித்த ‘டிரிபிள் வி.ரெகார்ட்ஸ்’ பட நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;