பாரதிராஜாவின் 4 படங்கள்!

பாரதிராஜாவின் 4 படங்கள்!

செய்திகள் 28-Nov-2014 1:12 PM IST VRC கருத்துக்கள்

அனைவராலும் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கப்படும் பாரதிராஜா ஏற்கெனவே ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்றாலும், கதையை நகர்த்தும் நாயகனாக நடித்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் அவர் நடிக்கும் படம் ‘ஓம்’. பாரதிராஜாவின் ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தை, ‘சலீம்’ படப் புகழ என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்துடன் இதே நிறுவனம் தயாரிக்கும் ‘சிவப்பு ரோஜாக்கள் 2’ படத்திலும் நடிக்கிறார் பாரதிராஜா. இதனை அவரது புதல்வர் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார். இப்படங்கள் தவிர ‘வி.எல்.எஸ். ராக் சினிமா’ நிறுவனம் சார்பில் வி.சந்திரன் தயாரிக்க, கிஷோர் இயக்கும் ஒரு படத்திலும் பாரதிராஜா நடிக்க இருப்பதோடு, பாடலாசிரியர் சிநேகன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் இருக்கிறார் பாரதிராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;