ஹீரோயின்கள் படைச்சூழ நடந்த ‘துணை முதல்வர்’ ஆடியோ விழா!

ஹீரோயின்கள் படைச்சூழ நடந்த ‘துணை முதல்வர்’ ஆடியோ விழா!

செய்திகள் 28-Nov-2014 12:45 PM IST VRC கருத்துக்கள்

கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ள படம் ‘துணை முதல்வர்’. பாக்யராஜுடன் ஜெயராம், ஸ்வேதா மேனன், சந்தியா முதலானோர் நடித்துள்ள இப்படத்தை ரா.விவேகானந்தன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜெய், பிரதீப், பாலாஜி ஆகிய மூவர் இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (28-11-140 காலை சென்னை சத்யம் தியேட்டரில் வழக்கமான ஆடியோ விழாக்கள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் நடந்தது. பாக்யராஜின் சிஷ்யரும், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் விழாவை கலகலப்பாக தொகுத்து வழங்க, ராதிகா சரத்குமார், ஸ்ரீப்ரியா, மீனா, சுஹாசினி மணிரத்னம், கோவை சரளா, ஊர்வசி, ரேகா, வடிவுக்கரசி, ரோகிணி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரை மேடையில் அமரவைத்து அவர்களுக்கு கௌரவம் செய்து, பெண் குலத்துக்கு மரியாதை செய்தனர் ‘துணை முதல்வர்’ படக் குழுவினர்.

அத்துடன் பாக்யராஜ் சினிமாவில் அறிமுக காரணமாக இருந்த ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தை தயாரித்த கோபிநாத் அவர்களையும் இவ்விழாவுக்கு அழைத்து வந்து கௌரவப்படுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது. விழாவில் பேசிய அத்தனை பேரும் கே.பாக்யராஜின் திரைக்கதை அமைப்பு திறமை பற்றியும், அவருடைய நகைச்சுவை உணர்வுகள் பற்றியும் பேசி, அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள்களையும் விடுத்தனர்.

விழாவை தொகுத்து வழங்கிய பார்த்திபன், ‘‘மேடையில் கௌரவிக்கப்பட்ட அத்தனை நடிகைகளும் இணைந்து இப்படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட வேண்டும், அதனை ரசிகர்களாகிய நீங்கள் எல்லோரும் கடைக்குச் சென்று விலை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூற, அரங்கத்தில் பலத்த சிரிப்பும், கைத் தட்டல்களுடனும் படத்தின் ஆடியோ சி.டி.வெளியிடப்பட்டது.

‘அனுகிரகதா ஆர்ட் ஃபிலிம்ஸ்’ பேனரில் இப்படத்தை தயாரித்திருப்பவர்கள் ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ் பாபு. இவர்களில் கே.ஜி.சுரேஷ் பாபு, பாக்யராஜ் அறிமுகமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை தயாரித்த கோபிநாத்தின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;