‘லிங்கா’ ரெக்கார்டை ‘லிங்கா’வே முறியடிக்குமா?

‘லிங்கா’ ரெக்கார்டை ‘லிங்கா’வே முறியடிக்குமா?

செய்திகள் 28-Nov-2014 9:55 AM IST Chandru கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘லிங்கா’ படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. கடந்த 15ஆம் தேதி வெளிவந்த ஏ.ஆர்.ரஹ்மானின் ‘லிங்கா’ பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி வெளிவந்த ‘லிங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதுவரை 40 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். தென்னிந்திய படங்களைப் பொறுத்தவரை ஷங்கரின் ‘ஐ’ (86 லட்சம்), ரஜினியின் ‘கோச்சடையான்’ (46 லட்சம்) ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ‘லிங்கா’ 3ஆம் இடத்திலிருக்கிறது.

அதேபோல், கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘லிங்கா’ படத்தின் 2 நிமிட டிரைலருக்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த டிரைலர் வெளிவந்து 13 நாட்களுக்குள் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனைக் கண்டுகளித்திருக்கின்றனர். இதனால், ‘லிங்கா’ டீஸர் ரெக்கார்டையும், ‘கோச்சடையான்’ டீஸர் ரெக்கார்டையும் ‘லிங்கா’ டிரைலர் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;