விஜய் சேதுபதியை பாராட்டிய தனுஷ்!

விஜய் சேதுபதியை பாராட்டிய தனுஷ்!

செய்திகள் 28-Nov-2014 9:52 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த 26ஆம் தேதி இரவு வெளிவந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, திரையுலக நட்சத்திரங்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதியே தயாரித்து, நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் 14 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வைகளைக் கடந்து, தற்போது 36 மணி நேரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த படங்களின் டீஸரைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை.

இப்படத்தில் வயதான கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். அதோடு, ஒரு ஆம்புலன்ஸ், மூன்று பேர், 48 மணி நேரம் இதுதான் இந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தின் கதை என டீஸரிலேயே தைரியமாக தெரிவித்தும் இருக்கிறார். இந்த டீஸரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தனுஷ் இது குறித்து, ‘‘தொடர்ந்து ஒவ்வொருமுறையும் வித்தியாசமான முயற்சிகளை செய்கிறார் விஜய் சேதுபதி. அவரை நினைக்க பெருமையாக இருக்கிறது!’’ என்று தனது ட்வீட்டில் குறிபிட்டு, படத்தின் டீஸரையும் பகிர்ந்திருக்கிறார்.

தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;