‘விஎஸ்ஓபி’ டைட்டில் வைத்தது ஏன்? - ராஜேஷ்

‘விஎஸ்ஓபி’ டைட்டில் வைத்தது ஏன்? - ராஜேஷ்

செய்திகள் 28-Nov-2014 9:45 AM IST Chandru கருத்துக்கள்

‘SMS’, ‘BEB’, ‘OK OK’, ‘AAA’ என தனது ஒவ்வொரு படத்தின் தலைப்பிலும் வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர் ராஜேஷ் தற்போது ஆர்யா, சந்தானம், தமன்னா நடிக்கும் படத்திற்கு ‘VSOP’ என டைட்டில் வைத்திருக்கிறார். அதாவது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்பதுதான் அந்த டைட்டிலின் விரிவாக்கம். ‘VSOP’ என்பது மதுபானங்களுக்கு வழங்கப்படும் ஒரு சர்வதேச சர்டிஃபிகேட்.

பொதுவாகவே ராஜேஷ் படங்களில் புகைப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும். கடைசியாக வெளிவந்த ‘அழகுராஜா’ படத்திலிருந்து அதுபோன்ற காட்சிகளை தன் படத்தில் இனி பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்திருந்தார் ராஜேஷ். இந்நிலையில் தற்போது இயக்கும் படத்திற்கு ‘VSOP’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தலைப்பு குறித்து இயக்குனர் ராஜேஷ் என்ன சொல்கிறார் தெரியுமா?

‘‘உண்மையில் இது யதேச்சையாக நடந்த ஒன்றுதான். படத்தின் நாயகன் ஆர்யாவும், சந்தானம் சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். எனவே ஆர்யாவின் கேரக்டர் பெயரான வாசுவையும், சந்தானத்தின் கேரக்டர் பெயரான சரவணனையும் மனதில் வைத்தே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற டைட்டிலை இப்படத்திற்கு வைத்தேன். மற்றபடி ‘VSOP’ என வரவேண்டும் என்பதற்காக நான் இந்த டைட்டிலை உருவாக்கவில்லை. அதேபோல் இப்படத்தின் கதைக்கும், மதுபானத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏற்கெனவே நான் சொல்லியதுபோல், இந்தப் படத்திலும் எனது நாயகன் புகைப்பது போன்ற காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறாது’’ என்று ‘டைட்டில்’ விளக்கம் கொடுக்கிறார் ராஜேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;