பவர் ஸ்டாரின் திகார் அனுபவங்கள்!

பவர் ஸ்டாரின் திகார் அனுபவங்கள்!

செய்திகள் 27-Nov-2014 2:12 PM IST VRC கருத்துக்கள்

நேற்று சென்னையில் நடந்த ‘திகார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வி.ஜ.பி.க்களில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர். விழாவில் ஒவ்வொருத்தரையாக பேச அழைத்த ‘திகார்’ பட இயக்குனர் பேரரசு, ‘‘இங்கே இருப்பவர்களில் கிரண்பேடி அவர்களை தவிர வேறு ஒருவருக்கும் திகார் ஜெயில் பற்றி நன்கு தெரியும். அவர் சமீபத்தில் திகார் ஜெயிலுக்கு போய் வந்துள்ளார். அவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்’’ என்ற அறிமுகத்தோடு பவர் ஸ்டார் சீனிவாசனை பேச அழைக்க,

‘‘கூப்பிட்டு வைச்சு இப்படி என்னை அவமானப்படுத்துறீங்களே..’’ என்று சிரித்தவாறே கூறி மைக்கை பிடித்தவர், ‘‘தம்பி பேரரசு ஃபோன் பண்ணி அண்ணே நீங்க என்னோட படத்தின் ஆடியோ ஃபங்ஷனுக்கு வரணும் என்றார். என்ன படம்னு கேட்டேன்! ‘திகார்’ என்றார். என்னது திகாரா? மறுபடியும் தில்லி போலீசார் வந்து விட்டாங்களானு பயந்தேன். முதல்ல இந்த விழாவுக்கு வருவதா, வேண்டாமானு யோசித்தேன். வந்தா நம்மளை கிண்டல் பண்ணிடுவாங்களேனு தயங்கினேன். அப்புறம் எல்லாம் பார்த்தாச்சு! இதையும் பார்த்துடுவோம்னு வந்தேன். இங்கு பேசின ரமேஷ் கண்ணா, இயக்குனர் ஏ.வெங்கடெஷ் எல்லாம் திகார் என்றால் அப்படி பரபரப்பா இருக்கும், இப்படி திகிலா இருக்கும் என்று சொனார்கள். திகார் ஜெயில் அப்படியொன்றும் இல்லீங்க!

நான் வேலூர் ஜெயிலில் இருக்கும்போது ஒரு நாள் இரவு 12 மணிக்கு திடீர்னு என்னை எழுப்பி, உங்களை டெல்லிக்கு கொண்டு போறோம் என்றார்கள்! எதுக்கு என்று கேட்டேன்! விசாரணைக்கு என்றார்கள்! முன்னாடியே சொல்லக் கூடாதா? ஏதாவது செலவுக்கு பணத்தை எடுத்து வருவேன் இல்லையா என்றேன். அதெல்லாம் தேவையில்லை. எல்லாம் திகார் ஜெயிலில் இருக்கும் என்றார்கள்! அதுக்கப்புறம் 2 மணிக்கு எழுப்பி, 3 மணிக்கு குளிக்கச் சொல்லி ஒரு தூக்கு கைதியை போன்று என்னை கூட்டிகிட்டு போனார்கள். ஒரு வேளை என்னை தூக்கில் போட கொண்டு போறாங்களோனு கூட பயந்தேன். அதுக்கப்புறம் என்னதான் வருதுன்னு பார்த்துடுவோம்னு கிளம்பினேன். வேலுரிலிருந்து நேரா டெல்லிக்கு தான் கூட்டிக்கிட்டு போனாங்க!

அது என்னோட கெட்ட நேரம். நான் எந்த தப்பும் செய்யவில்லை. என் கூட இருந்தவங்க என்னை ஏமாத்தி விட்டதால் எனக்கு அப்படியொரு நிலைமை ஏற்பட்டுருச்சு. அதனால தான் நான் இப்ப உங்க முன்னடி இப்படி நிக்கிறேன். இனி என் கவனம் முழுக்க சினிமாவில மட்டும் தான் இருக்கும். எல்லாரும் நினைக்கிற மாதிரி திகார் ஜெயில் அப்படியொன்றும் பயங்கரமானது இல்லை. அங்கு சென்ற அன்று இரவு 8 மணிக்கு என்னை ஒரு அறையில் அடைத்தார்கள். அந்த அறையில் படுத்து தூங்கினேன். காலையில் எழுதிருக்கும்போது என் அருகில் இரண்டு பேர் படுத்திருந்தாங்க. மொழி தெரியாததால் அவங்களை பற்றி ஒன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அப்புறம்தான் தெரிந்தது, அவர்கள் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் என்று! மனதில் நினைத்துக் கொண்டேன்! நல்ல வேளை தப்பித்தேன், அவர்கள் என்னை கற்பழிக்காமல் விட்டுட்டாங்களேனு! (அரங்கத்தில் பலத்த சிரிப்பு…)
திகார் ஜெயிலில் நிறைய தமிழ் போலீஸ்காரர்கள் இருந்தாஙக! அவங்க என்னை பார்த்ததும் என்ன பவர், இங்கு ஷூட்டிங்குக்கு வந்திருக்கீங்களானு கேட்டாஙக. இல்லீங்க, கைதியா வந்திருக்கேன்னு சொன்னேன். கவலைப்படாதீங்க, எல்லாம் சரியா போயிடும்னாங்க. அப்போது தான் புரிந்தது எனக்கு அங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், பவர் இருக்கிறது என்று! அதில் ஒரு போலீஸ்காரர் எனக்கு நல்ல நண்பரானார். அவர் என்னை ஜெயிலில் பல இடங்களுக்கு அழைத்து சென்று காண்பித்தார். அப்போது பெரிய பண முதலைங்க எல்லாம் அடைக்கப்பட்ட ஜெயிலுக்கு போனபோது ஒருவர் என்னிடம், என்ன மேட்டர்னு கேட்டார். சின்ன மேட்டர்தான் என்றேன். அப்ப அவர் நான் எவ்வளவு தெரியுமா, 2000 கோடி, நான் கடப்பாரை, நீயெல்லாம் குண்டூசி என்றார்! அப்பதான் தெரிந்தது கோடி கோடியாக ஏமாற்றிவிட்டு எப்படியெல்லாம் ஜெயிலில் ஜாலியாக இருக்கிறாங்க என்று!

ஜெயிலுக்கு போகிறது முன்னாடி என்னோட ஒரு ரசிகன் அடிக்கடி சொல்லுவான், ‘தலைவா உனக்காக நான் உயிரை கூட கொடுப்பேன்’ என்று! ஆனால் நான் ஜெயிலுக்கு போனப்ப தான் தெரிஞ்சது ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொடுக்க யாரும் இல்லைன்னு!
நமக்கு எங்கு போனாலும் ஒரு அனுபவம் கிடைக்கும்! அப்படி ஒரு அனுபவம் திகார் ஜெயிலுக்கு போனப்போதும் எனக்கு கிடைச்சது. இப்போது எனக்கு ஒரு தைரியம் வந்துள்ளது. நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று! திகார் ஜெயிலில் கூல் டிரிங்கஸ், ஜூஸ் எல்லாம் கொடுப்பாங்க! இந்தியாவில வேறு எந்த ஜெயிலில் கொடுக்கிறாங்க இது மாதிரியெல்லாம்’’ என்று பவர் ஸ்டார் பேசி முடிச்சதும் விழா அரங்கமே கைத்தட்டல்களாலும் சிரிப்பாலும் அதிர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;