அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பற்றிய படம்!

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பற்றிய படம்!

செய்திகள் 27-Nov-2014 12:06 PM IST Chandru கருத்துக்கள்

‘‘பரபரப்பான ஒரு நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு மனிதர்களை பற்றிய கதையை கொண்ட படம் ‘ஆயா வட சுட்ட கதை’. இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு அருகே உள்ள வீட்டில் யார் யார் வசிக்கிறார்கள் என்று கூட தெரியாது. இவர்களுக்கு அன்றாட சேவைகளை செய்து தருபவர்கள் பேப்பர் போடுபவர்கள், இஸ்திரி போட்டு தருபவர்கள், காவலாளியாக இருப்பவர்கள், கார் ஓட்டுனர்களாக இருப்பவர்கள் தான்! இந்த மனிதர்களுக்குள் நடக்கும் கதையில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பதை இப்படம் விளக்கும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் ஃபனிந்திரா.

சுரேஷின் ‘ஸ்டுடியோ 9’ நிறுவனமும், ‘ஃபிக்சல் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அவிதேஜ் கதாநாயகனாக நடிக்க, சுபர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் துரைபாண்டி, ரங்கபாஷ்யம், ஆதி, நந்தா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, ஷமீர், ஷிவா இசை அமைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;