விஜய் சேதுபதி இப்போ ஹேப்பி அண்ணாச்சி!

விஜய் சேதுபதி இப்போ ஹேப்பி அண்ணாச்சி!

செய்திகள் 27-Nov-2014 12:06 PM IST Chandru கருத்துக்கள்

விஜய்சேதுபதி வயதான தோற்றத்தில் நடிக்கும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தின் டீஸர் நேற்று (நவ 26) வெளியானது. விஜய்சேதுபதியே தயாரிக்கும் இப்படத்தை ஆங்கிலம், ஜப்பனீஸ், உருது, மலையாளம், ஐரீஷ் என பலதரப்பட்ட மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ள பிஜு விஸ்வநாத் இயக்குகிறார். கடந்த வாரம் வெளியான ‘வன்மம்’ படத்திற்கு சரியான விமர்சனங்கள் கிடைக்காத நிலையில், நேற்று வெளியான ‘ஆரஞ்சு மிட்டாய்’ டீஸருக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் மிதக்கிறார் விஜய் சேதுபதி.

குறிப்பாக, இப்படத்தின் டீஸரை வித்தியாசமாக உருவாக்கியிருந்தவிதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. விஜய் சேபதியே தன் படத்தைப் பற்றி சொல்வது போலவும், அதை இன்னொரு விஜய் சேதுபதி இடையிடையே புகுந்து கலாய்ப்பதைப் போலவும் இந்த டீஸரை உருவாக்கியிருக்கிறார்கள். அதோடு இந்த டீஸரில் வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி போடும் குத்தாட்டமும் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். விஜய் சேதுபதியிடமிருந்து தாங்கள் இதுபோன்ற படங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் எனவும் ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

‘ஆரஞ்சு மிட்டாய்’ டீஸர் வெளியான 14 மணி நேரத்திற்குள்ளாகவே 1 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. அதோடு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றிலும் தற்போது டிரென்டில் இருக்கிறது ‘ஆரஞ்சு மிட்டாய்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;