புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’

புதுமுகங்கள் நடிக்கும்   ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’

செய்திகள் 27-Nov-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

‘தேவகலா ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும் டி. சுரேஷ் தயாரிக்கும் படம் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’. வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படத்தில் புதுமுகம சஞ்சீவ் முரளி கதாநாயகனாக நடிக்க, சில மலையாள படங்களில் நடித்துளள ஸ்ரீரக்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அஸ்வினி நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் சந்தோஷ் கோபால் படம் குறித்து பேசும்போது,

‘‘வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் கதாநாயகன் சஞ்சீவ்முரளி ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறார். அதனால் தனக்கு மிகப் பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைத்து வில்லனுடன் பழகுகிறார்.கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று கதாநாயகனின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை. அதை கமர்ஷியலாக நாகர்கோவில், கன்யாகுமரி, கொடைக்கானல் போன்ற இடங்களின் பின்னணியில் சொல்லுகிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது’’ என்றார்.இப்படத்திற்கு சுமன்பிச்சு இசை அமைக்க, அய்யப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெயிக்கிற குதிர - டிரைலர்


;