அனைவருக்குமான படம் ‘141’

அனைவருக்குமான படம் ‘141’

செய்திகள் 27-Nov-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

‘‘1 பந்து, 4 ரன், 1 விக்கெட்’ என்றதும் இது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமா என்று நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் அல்ல! படத்தில் கிரிக்கெட்டும் இருக்கிறது. காமெடியும் இருக்கிறது. திகில் காட்சிகளும் இருக்கிறது. அனைவருக்குமான ஒரு படமாக ‘141’ இருக்கும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் வீரா. ‘ரைசிங் சன் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கே.என்.ரவிசங்கர் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் வினய் கிருஷ்ணாவும், ஹர்ஷிதா தத்தும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் உமேஷ் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எக்ஸ் வீடியோஸ் தமிழ் - டீசர்


;